class="wp-singular post-template-default single single-post postid-19 single-format-standard wp-theme-newscard theme-body">

இலங்கையிலும் சட்டென்று குறைந்த தங்கவிலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் நேரடிப் பிரதிபலிப்பாக, இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்றைய தினம் (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *